மீன்பிடி தடைக்காலம்: பைபர் படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்


மீன்பிடி தடைக்காலம்: பைபர் படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்
x
தினத்தந்தி 20 April 2017 4:15 AM IST (Updated: 20 April 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி தடைக்காலத்தையொட்டி வேதாரண்யத்தில் பைபர் படகுகளில் மீன்பிடிக்க மீனவர்கள் சென்றனர்.

வேதாரண்யம்,

வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுக்காட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் நேற்றுமுன்தினம் அதிக அளவில் மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடி தடைக்காலம் தொடங்கி விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் குறைந்த தூரம் மீன்பிடிக்கும் பைபர் படகு மீனவர்கள், மீன்களுக்கு அதிக விலை கிடைப்பதால் அதிகளவில் நேற்றுமுன்தினம் மீன்பிடிக்க சென்றனர். இப்பகுதி மீனவர்கள் வலையில் காலா, வஞ்சிரம், ஊளி, படாங்கன், இறால், நண்டு உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்களும், சிறிய ரக மீன்களும் அதிக அளவில் கிடைத்தன. வேதாரண்யத்தில் இருந்து நள்ளிரவில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் காலை கரை திரும்பினர். அவர்களது வலையில் கிடைத்த வஞ்சிரம் மீன்கள் கிலோ ரூ.700-க்கும், மற்ற மீன்கள் சராசரியாக ரூ.400-க்கும் விலை போனது. மீனுக்கு விலை அதிகம் கிடைப்பதால் நேற்று வேதாரண்யம் மீனவ கிராமங்களில் இருந்து அதிகளவில் மீனவர்கள் பைபர் படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். 

Next Story