ஆறுகாணி அருகே பாறைபொடி கடத்திய லாரி பறிமுதல் 2 பேர் கைது


ஆறுகாணி அருகே பாறைபொடி கடத்திய லாரி பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 April 2017 3:45 AM IST (Updated: 20 April 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

ஆறுகாணி அருகே பாறைபொடி கடத்திய லாரி பறிமுதல் 2 பேர் கைது

அருமனை,

குமரி மாவட்ட மணல் கடத்தல் தடுப்பு பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் தலைமையில் போலீசார் ஆறுகாணி அருகே அணைமுகம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கேரளாவுக்கு பாறைப்பொடி ஏற்றி சென்ற லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில், முறையான ஆவணங்கள் இன்றி பாறைப்பொடி கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்து டிரைவர் ஷாஜி (35), கிளீனர் ஜெயசீலன் (42) ஆகியோரை கைது செய்து ஆறுகாணி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


Next Story