கடுமையான வெயில் காரணமாக கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடியது
கடுமையான கோடை வெயில் காரணமாக கன்னியாகுமரி கடற்கரை நேற்று மதியம் வெறிச்சோடியது.
கன்னியாகுமரி,
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாதலம் கன்னியாகுமரி. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இவர்கள் கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம், காமராஜர் நினைவு மண்டபம், சுனாமி நினைவு பூங்கா போன்றவற்றை பார்வையிட்டு மகிழ்வார்கள். மேலும், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை பார்க்க படகின் மூலம் செல்வார்கள். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
கோடை விடுமுறையையொட்டி ஏப்ரல், மே மாதம் சீசன் காலமாக கருதப்படுகிறது. இதையொட்டி தற்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் காலை, மாலை நேரங்களில் கடற்கரையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கடுமையான வெயில்
குமரி மாவட்டத்தில் தற்போது வெயில் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. எனவே பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது என மாவட்ட கலெக்டர் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், நேற்று மதியம் கன்னியாகுமரி கடற்கரையில் கடுமையான வெயிலுடன், அனல் காற்று வீசியது. இதனால், சுற்றுலா பயணிகள் யாரும் கடற்கரைக்கு செல்லவில்லை. அனைவரும் லாட்ஜ் அறைகளில் முடங்கினர். இதனால், நேற்று மதியம் கன்னியாகுமரி கடற்கரை, காந்தி மண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலை போன்ற பகுதிகள் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story