நீர் பாதுகாப்பு திட்ட பணிகளை 2 மாதத்தில் முடிக்க வேண்டும்


நீர் பாதுகாப்பு திட்ட பணிகளை 2 மாதத்தில் முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 20 April 2017 2:55 AM IST (Updated: 20 April 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

நீர் பாதுகாப்பு திட்ட பணிகளை 2 மாதத்தில் முடிக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.

மும்பை,

நீர் பாதுகாப்பு திட்ட பணிகளை 2 மாதத்தில் முடிக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.

தேவேந்திர பட்னாவிஸ் ஆலோசனை

முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று வீடியோ கான்பெரன்ஸ் வாயிலாக அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மண்டல கமி‌ஷனர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘ஜல்யுக்த் ஷிவார்’ (நீர் பாதுகாப்பு திட்டம்), விவசாய குளம் மற்றும் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (அனைவருக்கும் வீடு) ஆகிய திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், அவர் கலெக்டர்கள் மத்தியில் பேசியதாவது:–

இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. மழை நீரை நல்ல முறையில் சேமிப்பதற்கான திறன் நம்மிடம் இருந்தால், இந்த பருவமழை காலத்தில் இருந்து நாம் பயன்பாட்டை பெறலாம். ஆகையால், அடுத்த 2 மாதமும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு முன்னுரிமை அளிப்போம்.

தனியார் அமைப்புகளுடன் தொடர்பு

இதனை கலெக்டர்கள் அனைவரும் தீவிரமாக பின்பற்றி, 2 மாதத்தில் அதாவது மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு நீர் பாதுகாப்பு திட்டத்தின் எஞ்சிய பணிகளை முடிவுக்கு கொண்டு வாருங்கள். இதையொட்டி, நீர் பாதுகாப்பு திட்ட பணிகளில் தங்களை ஈடுபடுத்தி வரும் தனியார் அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

இதுபற்றிய புதுமையான திட்டங்கள் மற்றும் மாதிரிகளுடன் வாருங்கள். பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ், நகராட்சிகளும், மாநகராட்சிகளும் இரண்டு திட்ட வரைவை 15 நாட்களுக்குள் மாநில அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.


Next Story