பெண் தூக்குப்போட்டு தற்கொலை: உதவி கலெக்டர் விசாரணை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை: உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 22 April 2017 4:45 AM IST (Updated: 21 April 2017 11:07 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

அரக்கோணம்,

அரக்கோணம் அருகே கிழவனம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகள் புவனேஸ்வரி (வயது 22). இவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பெரியஜாம்பட்டை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பாலாஜி (26) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 19–ந் தேதி கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக புவனேஸ்வரி கிழவனத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்து விட்டார். நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப் போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்–இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் புவனேஸ்வரிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் ராஜலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story