சைக்கிளில் நாடுகளைக் கடக்கும் பெண்!
இங்கிலாந்தில் இருந்து ஈரானுக்கு ஓராண்டு கால, 7 ஆயிரம் மைல் நீள சைக்கிள் பயணத்தை ரெபேக்கா தொடங்கியபோது அவருக்குப் புத்தி பிசகிவிட்டது என்றுதான் அவருடைய நண்பர்கள் நினைத்தனர்.
சைக்கிள் பயணத்தில் மிகுந்த ஆர்வமுள்ள இங்கிலாந்துப் பெண் ஒருவர், பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் பயணித்து, பல நாட்டு மக்களைச் சந்தித்திருக்கிறார்.
ரெபேக்கா லூயிஸ் என்ற அந்தப் பெண்ணின் சைக்கிள் பயணம் ஓர் அசாதாரண சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.
இங்கிலாந்தில் இருந்து ஈரானுக்கு ஓராண்டு கால, 7 ஆயிரம் மைல் நீள சைக்கிள் பயணத்தை ரெபேக்கா தொடங்கியபோது அவருக்குப் புத்தி பிசகிவிட்டது என்றுதான் அவருடைய நண்பர்கள் நினைத்தனர்.
எகிப்தில் இருந்து துருக்கி, தெற்கிலிருந்து ஓமனுக்கு விமானத்தில் செல்வதற்கு முன் எகிப்து மற்றும் சூடான் என்று சைக்கிளில் பயணித்த அவர், ஈரானில் தன்னுடைய பயணத்தை முடித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளில் தனியாக ஒரு பெண்ணாக தான் மேற்கொண்ட பயணம் குறித்த அவரது கட்டுரை, இணையதள வாசகர்களிடம் வெகுவாக வரவேற்புப் பெற்றது.
அதில், ‘அல்பேனியாவின் எல்லையில் உள்ள புரெக்லிடிஜி மலைத்தொடரின் உச்சியில் நான் எனது சைக்கிளுடன் நன்கு ஓய்வெடுத்தேன். அந்தக் கடினமான மலையேற்றம், எனக்கு மிகுந்த சாதனை உணர்வை ஏற்படுத்தியது.
தவுருஸ் மலைத்தொடரின் வழியே பனிமூட்டத்தில் பயணம் செய்தபோது எனது சைக்கிள் பழுதடைந்தது. சுமார் 3 ஆயிரத்து 400 மைல்கள் ஓடிய நிலையில் சைக்கிளின் டயர், காகித அளவு தடிமனுக்கு தேய்ந்துபோய்விட்டது.
சிரியாவின் எல்லைக்கு அருகில், லெபனானின் பிக்கா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள வசதியற்ற சிரியா அகதிகள் முகாமில் அவர்களைச் சந்தித்தேன். மழை மற்றும் பனியால் கூடாரங்கள் சேறாகவும், ஈரமாகவும் இருந்தன. ஒவ்வொரு முகாம் குடிலிலும் சுமார் 10 பேர் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்கின்றனர்.
அம்மான், ஜோர்டான் மற்றும் செத்தகடலுக்கு இடையில் உள்ள கீல் சாலையை சற்று கவனக்குறைவுடன் கடந்தேன். பின் ஒழுங்கற்ற மாற்றுப்பாதைகள் வழியாகவும் பயணித்தேன்.
சூடானில் சகாரா பாலைவனத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் பயணித்தேன். ஒருசமயம் தண்ணீர் சுத்தமாகத் தீர்ந்துபோய்விட மிகவும் தவித்துப்போய்விட்டேன். நீர்ச்சத்து இழப்பையும் அனுபவித்தேன். ஒரு நல்ல உள்ளூர் குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டேன்.
சூடானின் கார்ட்டூமுக்கு அருகில், ஒட்டகங்களை விற்பவர் களையும், வாங்குபவர்களையும் கண்டேன். இங்குள்ள வியாபாரிகள், பெரும் ஆதாயத்துக்கு ஒட்டகங்களை விற்க முயல்வதை உணர்ந்தேன். இங்கு வாரம் இருமுறை சுமார் 350 ஒட்டகங்கள் விற்கப்படுகின்றன.
கார்ட்டூமில் உள்ள தேயிலை பறிக்கும் பெண்களைச் சந்தித்த போது அவர்கள் சுரண்டல்காரர்களாலும் போலீசாராலும் அவதிப்படுவதை அறிந்தேன். இங்கு கடந்த ஆண்டு தேயிலை கூட்டுறவு சங்கத்தை உருவாக்கியதைப் பாராட்டி அவாதியா மகமத்தியா என்ற பெண்ணுக்கு அமெரிக்க சர்வதேச தீர விருது வழங்கப்பட்டிருக்கிறது.
ஈரானின் தெற்குப் பகுதியில் அழகிய நூல் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட போரிகி முகமூடிகளை அணிந்த ஷியா முஸ்லிம் பெண்களைச் சந்தித்தேன்.
ஈரானின் அப்வானி மலைத்தொடர் பகுதியில் எனது சைக்கிள் மீண்டும் பழுதடைந்தது. இரண்டு டயர்களிலும் முற்றிலும் காற்று இறங்கிவிட்டதால் தவித்த எனக்கு சில ஆடு மேய்ப்பவர்கள் கைகொடுத்து, நான் பயணத்தைத் தொடர உதவினர்’ என்று தனது பயண அனுபவங்களை அழகிய புகைப்படங்களுடன் வெளியிட்டிருக்கிறார், ரெபேக்கா லூயிஸ்.
நீண்ட சைக்கிள் பயணத்தின் பாடங்களும் அனுபவங்களும் அவருக்கு வாழ்நாள் முழுவதும் பயன்படக்கூடும்.

Next Story