சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்
சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் மாநகராட்சியையொட்டி உள்ள சன்னியாசிகுண்டு பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் பாறைகாடு, சிவன்கரடு, காமராஜர் நகர் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் குடிநீர் தேவை உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் தனியார் லாரி மூலம் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வந்தனர்.
அதை வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்துவதாக கூறி நேற்று முன்தினம் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அந்த பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அளித்த உறுதியின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
சாலை மறியல்
சேலம் எருமாபாளையம் நாவலர் நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை என்றும், அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
அதைத்தொடர்ந்து, நாவலர் நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் சீரான குடிநீர் கேட்டு சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் 2-வது நாளாக வேறு பகுதியை சேர்ந்த மக்கள் மறியல் போராட்டம் நடத்திய தகவல் அறிந்து கிச்சிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பெண்கள் கூறுகையில், “ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாததால், மாற்று ஏற்பாடு செய்து சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும்“ என்றனர். அதிகாரிகள் தரப்பில், லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் மறியல் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story