தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 April 2017 4:30 AM IST (Updated: 25 April 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நெல்லை,

தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாநில பொது செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் செல்லத்துரை, காளிதாசன், செயலாளர் சுப்பிரமணியன், இணை செயலாளர்கள் சேகர், ராமசுப்பு, பொருளாளர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அகில இந்திய அரசு அலுவலர் கூட்டமைப்பு துணை தலைவர் சீதாராமன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அனைத்து கூட்டுறவு ஓய்வு பெற்ற பணியாளர்கள் நல சங்க மாநில தலைவர் சிவசுப்பிரமணியன் கோரிக்கையை விளக்கி பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வற்புறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

கோரிக்கைகள்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்க ரே‌ஷன் கடைகளில் பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கு அரசு ஓய்வூதியம் மற்றும் கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் அருணாசலம், மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் நக்கீரன், வட்ட தலைவர் ராஜாசுப்பிரமணியன், நிர்வாகிகள் முகமது உசேன், பரமசிவன், நடராஜ கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் கூட்டுறவு வங்கிகள் செயல்படவில்லை. இதனால் பொதுமக்கள் நகைகடன், விவசாய கடன் வாங்க முடியவில்லை. மேலும் ரே‌ஷன் கடை ஊழியர்களும் இதில் கலந்து கொண்டதால் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டன.


Next Story