வேடசந்தூர் அருகே பலத்த சூறாவளி காற்று: கோழிப்பண்ணை சரிந்து விழுந்து 5 ஆயிரம் கோழிகள் செத்தன
வேடசந்தூர் அருகே பலத்த சூறாவளி காற்று: கோழிப்பண்ணை சரிந்து விழுந்து 5 ஆயிரம் கோழிகள் செத்தன, 200 வாழை மரங்கள் சாய்ந்து சேதம்
வேடசந்தூர்,
வேடசந்தூர் அருகே பலத்த சூறாவளி காற்றில் கோழிப்பண்ணை சரிந்து விழுந்ததில் 5 ஆயிரம் கோழிகள் செத்தன. மேலும் 200 வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன.
சூறாவளி காற்று
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அந்தவேளையில் பலத்த சூறாவளி காற்றும் வீசியது. இதனால் காற்றில் குப்பைகள் பறந்தன. சுமார் 30 நிமிடம் பலத்த சூறாவளி காற்று வீசியது.
இந்த காற்றில் வேடசந்தூர் அருகே உள்ள வெல்லம்பட்டி கிராமமே சின்னாபின்னமானது. அங்குள்ள சாலை ஓரத்தில் இருந்த பனைமரம் ஒன்று பாதியில் முறிந்து சாலையில் விழுந்தது. நல்லவேளையாக அந்த நேரத்தில் சாலையில் யாரும் செல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
மரம் சாய்ந்தது
இதேபோல், ஊரின் நுழைவுவாயிலில் உள்ள முத்தாலம்மன் கோவிலுக்கு மேற்பகுதியில் போடப்பட்டிருந்த தகர கூரை காற்றில் பறந்தது. ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு இருந்த விளம்பர பலகைகளும் சரிந்தன. அத்துடன் ஆதிதிராவிடர் காலனியில் கிழக்கு தெருவில் முத்தாரி என்பவருடைய வீட்டின் மீது வேப்பமரம் சாய்ந்து விழுந்தது.
இதில் ஓடுகள் உடைந்து வீட்டுக்குள் விழுந்தன. நல்லவேளையாக முத்தாரி குடும்பத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதேபோல் அந்த தெருவில் உள்ள பெருமாள், பொம்மையன், பாண்டி, ராமன், பழனிச்சாமி உள்ளிட்ட 20 பேரின் வீடுகளின் ஓடுகள் பலத்த காற்றினால் பறந்தன.
5 ஆயிரம் கோழிகள் செத்தன
அதுமட்டுமின்றி பாக்கியலட்சுமி என்பவரின் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கோழிப்பண்ணையின் மேற்கூரை பலத்த காற்றினால் முழுவதும் சரிந்து விழுந்தது. இதில் பண்ணையில் இருந்த சுமார் 5 ஆயிரம் கோழிகள் செத்தன. சரிந்த கோழிப்பண்ணையை வேடசந்தூர் தாசில்தார் தசாவதாரன் தலைமையில் வருவாய்த்துறையினர் பார்வையிட்டனர். இதற்கிடையில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம் நிர்வாகிகளுடன் சேர்ந்து கோழிப்பண்ணையை பார்வையிட்டார்.
இதேபோல் ஸ்ரீராமபுரம் ஊராட்சி ஆத்துப்பட்டியில் ரகுநாதன் என்பவருடைய தோட்டத்தில் குலை தள்ளிய நிலையில் இருந்த சுமார் 200 வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.

Next Story