மருத்துவ கல்லூரி கட்டிட பணியை தொடங்க கோரி கலெக்டரிடம் மனு
காந்திகிராமம் பகுதியில் மருத்துவ கல்லூரி கட்டிட பணியை தொடங்க கோரி கீதா எம்.எல்.ஏ தலைமையில் ஊர்வலமாக சென்று பொதுமக்கள் கலெக்டர் கோவிந்தராஜிடம் மனு கொடுத்தனர்.
கரூர்,
கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கீதா தலைமையில் நேற்று ஏராளமான பொதுமக்கள் கரூர் அரசு கலைக்கல்லூரி முன்பு இருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் சென்று கலெக்டர் கோவிந்தராஜிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கரூர் அரசு மருத்துவ கல்லூரி கட்ட கரூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்தி கிராமம் பகுதியில் கரூர் நகராட்சிக்கு சொந்தமான இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த இடம் கரூர் நகரிலேயே உள்ளது. இங்கு மருத்துவ கல்லூரி கட்டுவதன் மூலம் அனைத்து ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும்.
மருத்துவ கல்லூரி அமைய உள்ள இடத்தின் 4 புறத்திலும் 24 மணி நேரமும் பஸ் வசதி உள்ளது. இங்கிருந்து அரசு தலைமை ஆஸ்பத்திரி 2 கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளது. அதே போன்று காந்திகிராமத்தில் மருத்துவ கல்லூரி அமைந்தால், அவசர சிகிச்சைக்கு வெகு தூரத்தில் இருந்து வருபவர்களுக்கு வசதியாக இருக்கும்.
அடிக்கல்
கரூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டீன், வாங்கல் குப்புச்சிபாளையம் இடம் மருத்துவமனை கட்ட தகுதி இல்லாத இடம் என்று அறிக்கை தாக்கல் செய்து உள்ளார். காந்திகிராமம், சணப் பிரட்டி பகுதியில் மருத்துவ கல்லூரி அமைக்க கோரி முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். எனவே கரூர் நகராட்சிக்கு சொந்தமான காந்திகிராமம் பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி கட்டிட பணியை விரைவில் தொடங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். முன்னதாக பொது மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதை தெரிந்து கொண்ட கலெக்டர், அலுவலகத்தை விட்டு வெளியில் வந்து பொது மக்கள் மத்தியில் மனுவை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊர்வலத்தில் அ.தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள், வியாபாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story