வெம்பாக்கம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி பலியான மாணவர் உடல் மீட்பு


வெம்பாக்கம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி பலியான மாணவர் உடல் மீட்பு
x
தினத்தந்தி 29 April 2017 2:00 AM IST (Updated: 29 April 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கொடுங்கையூர் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் ஆதிமூலம். இவருடைய மகன் சுரேஷ் (வயது 19).

வெம்பாக்கம்,

சென்னை கொடுங்கையூர் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் ஆதிமூலம். இவருடைய மகன் சுரேஷ் (வயது 19). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் காஞ்சீபுரம்– அரக்கோணம் சாலையில் அமைந்துள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 26–ந் தேதி மதியம் சுரேஷ் மற்றும் அவரது நண்பர்களுடன் வெம்பாக்கம் அருகே உள்ள சோழவரம் கல்குவாரியில் உள்ள குட்டையில் குளிக்க சென்றார். அப்போது குட்டையில் சுரேஷ் மூழ்கினார். இதையடுத்து செய்யாறு தீயணைப்பு துறையினர், அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 15 பேர் குட்டையில் மூழ்கிய சுரேஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். 3–வது நாளாக நேற்றும் தேடும் பணி நடந்தது.

உதவி கலெக்டர் பிரபுசங்கர், வெம்பாக்கம் தாசில்தார் பெருமாள், செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், தூசி இன்ஸ்பெக்டர் சரவணன், சப்–இன்ஸ்பெக்டர் கோதண்டபாணி ஆகியோர் தேடும் பணியை தீவிரப்படுத்தினர். இதையடுத்து நேற்று மாலை 4–30 மணியளவில் சுரேஷ் உடல் மீட்கப்பட்டது.

இந்த கல்குவாரி குட்டை 600 அடி ஆழமும், 200 அடி நீளமும், 300 அடி அகலம் கொண்டதாகும்.

Next Story