மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஆதார் எண் இணைக்க வேண்டும் முகாம்களை பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் வேண்டுகோள்
வேலூர் மாவட்டத்தில் முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஆதார் எண் இணைக்க வேண்டும்
வேலூர்
முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 8 லட்சத்து 17 ஆயிரத்து 52 மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகள் உள்ளன. அதில் சுமார் 4 லட்சத்து 82 ஆயிரத்து 403 அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டன.
மீதமுள்ள 3 லட்சத்து 34 ஆயிரத்து 649 மருத்துவ காப்பீடுதிட்ட அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கப்படவில்லை. இந்த அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கும் பணி வேலூர் மாவட்டத்தில் கிராமம், கிராமமாக நடைபெற்று வருகிறது.
முகாம்கள்அணைக்கட்டு, குடியாத்தம், காட்பாடி, வேலூர், வாலாஜா, ஆற்காடு ஆகிய தாலுகாக்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அல்லது ரேஷன் கடைகளில் முகாம் அமைத்து ஆதார் எண்களை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மற்ற தாலுகாக்களில் இந்த பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் மருத்துவ காப்பீடு திட்ட அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.