மண், வண்டல் மண் எடுக்க 974 குளங்கள் தேர்வு அனுமதி வழங்குவதற்கான முகாம் நாளை நடக்கிறது
வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பாட்டுக்கு மண், வண்டல் மண்
வேலூர்,
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் சொந்த நோக்கத்திற்காகவும், விவசாய நிலங்களை மேம்படுத்தும் நோக்கத்திற்காகவும் வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள கண்மாய், குளம் ஆகியவற்றில் மண், வண்டல் மண், சவுடு எடுக்க தகுதி வாய்ந்த குளம், கண்மாய்களின் பட்டியல்கள் அனைத்து தாசில்தார்கள், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் மண், வண்டல் மண், சவுடு எடுக்க 974 குளங்கள், கண்மாய்கள் தகுதி வாய்ந்தவையாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குளங்கள், கண்மாய்களின் பட்டியல் அனைத்து தாலுகா அலுவலகங்களில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
மண்பாண்ட தொழிலாளர்கள்இந்த குளங்கள், கண்மாய்களில் இருந்து பொதுமக்கள், விவசாயிகள், விவசாய தேவைகளுக்காக நஞ்சை நிலமாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 75 கனமீட்டர் அல்லது 12 லாரிகளும், ஒரு ஹெக்டேருக்கு 185 கனமீட்டர் அல்லது 30 லாரிகள், புஞ்சை நிலமாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டர் அல்லது 15 லாரிகள், ஒரு ஹெக்டேருக்கு 222 கனமீட்டர் அல்லது 37 லாரிகள் மண், வண்டல் மண், சவுடு 2 வருடங்களுக்கு எந்தவித கட்டணமும் செலுத்தாமல் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் பொதுமக்கள் தங்கள் சொந்த தேவைகளுக்காக 30 கனமீட்டர் அல்லது 5 லாரிகள் எடுத்துக்கொள்ளலாம். மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானை செய்வதற்கு 60 கனமீட்டர் அல்லது 10 லாரிகள் அளவிற்கு எடுத்துக்கொள்ளலாம்.
சிறப்பு முகாம்அதற்கான அனுமதி வழங்கும் சிறப்பு முகாம் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5–45 மணி வரை நடைபெற உள்ளது.
பொதுமக்கள், விவசாயிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் மண், வண்டல் மண், சவுடு, கிராவல் பெற்றுக் கொள்ளலாம் என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.