தர்மபுரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புதுறை உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு பட்டதாரிகள் திரளாக பங்கேற்பு


தர்மபுரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புதுறை உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு பட்டதாரிகள் திரளாக பங்கேற்பு
x
தினத்தந்தி 12 May 2017 4:15 AM IST (Updated: 11 May 2017 7:18 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு நடக்கிறது.

தர்மபுரி

தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு நடக்கிறது. இதன்படி தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான நேர்முகத்தேர்வு தர்மபுரி இலக்கியம்பட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது. இந்த பணிக்கு தர்மபுரி மாவட்டத்தில் 8,622 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கு வருகிற 17–ந்தேதி வரை நேர்முகத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தநிலையில் நேற்று 2–வது நாளாக நடந்த நேர்முகத்தேர்வில் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் என ஆண்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். இவர்களுடைய கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

இந்த தேர்வு குறித்து கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் சீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில், 8–ம் வகுப்பு தேர்ச்சியை அடிப்படை கல்வித்தகுதியாக கொண்டு இந்த நேர்முகத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் கால்நடை மருத்துவர்களுக்கு உதவியாளர்களாக செயல்பட உள்ளனர். எனவே இந்த தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களுக்கு மாடுகளை கையாளும் முறைகள் குறித்த அடிப்படை அறிவு உள்ளதா? என்பதை கண்டறிய அதிகாரிகள் முன்னிலையில் செயல்முறை தேர்வும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் பிற விதிமுறைகளின்படி கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அவர் கூறினார்.


Next Story