கோவை அருகே பெண் படுகொலை: கூலிப்படையை ஏவி கணவரே கொன்றது அம்பலம்
கோவை அருகே பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரே கூலிப்படையை ஏவி வெட்டிக்கொன்றது விசாரணையில் அம்பலமானது.
பேரூர்
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் இருந்து மாதம்பட்டி செல்லும் சாலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். பிணமாக கிடந்த பெண்ணின் கழுத்து, முதுகு, வலது கையில் வெட்டுக்காயங்கள் இருந்தன. உடல் அருகே ஒரு பையில் கவரிங் நகைகள், ரத்தம் தோய்ந்த நிலையில் ஒரு ஜோடி கையுறை கிடந்தது. கொலை நடந்த இடத்தில் இருந்து 10 மீட்டர் தொலைவில் ரத்தக்கறையுடன் அரிவாள் கிடந்தது.
இவற்றை சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கைப்பற்றினர். ஆனால் கொலை செய்யப்பட்ட பெண் யார்?. அந்த பகுதியை சேர்ந்தவர் என்று, அந்த பெண்ணின் புகைப்படத்தை பொதுமக்களிடம் காட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
அடையாளம் தெரிந்தது
இதில், கொலை செய்யப்பட்ட பெண், தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த குழந்தைவேலுவின் மனைவி ரேணுகா என்பது தெரியவந்தது. மேலும் ரேணுகாவின் உடலை பார்த்து அவருடைய கணவர் குழந்தைவேலு அடையாளம் காண்பித்து உறுதி செய்தார். அப்போது, மனைவி கொலை செய்யப் பட்டதால் சோகமாக இருப்பதுபோல் காட்டிக் கொண்டார்.
ரேணுகா, காந்திபார்க் பகுதியில் உள்ள கவரிங் நகைக்கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். குழந்தைவேலு ஆலாந்துறையில் மின்சாரவாரிய ஊழியராக வேலை செய்து வந்தார். கொலை நடை பெற்ற இடம் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியாகும். எனவே முன்கூட்டியே திட்டமிட்டு கொலையாளிகள் ரேணுகாவை அழைத்து வந்து கொன்று இருப்பதாலும், ரேணுகாவுக்கு தெரிந்தவர்களே இந்த கொலையை செய்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்தனர்.
கூலிப்படையை ஏவி கொலை
இது தொடர்பாக கணவர் குழந்தைவேலுவிடம் விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், குழந்தைவேலு, மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
குழந்தைவேலுவுக்கு, ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை அறிந்த ரேணுகா தனது கணவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் மனைவியை தீர்த்து கட்ட குழந்தைவேலு திட்டமிட்டார். இதற்காக போளுவாம்பட்டி பகுதியில் தர்பூசணி வியாபாரம் செய்து வந்த மதுரையை சேர்ந்த முனிராஜ் (21) என்பவர் மூலம், ராஜபாளையத்தை சேர்ந்த கூலிப்படையினர் 2 பேரை வைத்து ரேணுகாவை கொலை செய்தது தெரியவந்தது. இதற்கு முன்பணமாக ரூ.10 ஆயிரத்தை முனிராஜிடம், குழந்தைவேலு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
கொலை நடைபெற்ற இடத்துக்கு குழந்தைவேலு, தனது மனைவிக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். அதன்பின்னர் அங்கு நின்ற கூலிப்படையினர் ரேணுகாவை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடி விட்டனர். தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கூலிப்படையை வைத்து மனைவியை தீர்த்துக்கட்டியதாக குழந்தைவேலு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தீவிர விசாரணை
இதையடுத்து குழந்தைவேலு, முனிராஜ் ஆகிய 2 பேரிடம் தொண்டாமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தீவிர விசாரணை நடத்தி வருகிறார். கூலிப்படையை சேர்ந்த மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கள்ளக்காதல் விவகாரத்தில், கணவரே மனைவியை கூலிப்படையை ஏவி கொன்றது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story