ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா மரணம் இறுதிசடங்கு இன்று நடக்கிறது


ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா மரணம் இறுதிசடங்கு இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 12 May 2017 4:30 AM IST (Updated: 12 May 2017 12:17 AM IST)
t-max-icont-min-icon

ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா நேற்று மரணம் அடைந்தார்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா. இவருக்கு வயது 82. இந்தநிலையில் இவர் நேற்று மாலை 6.30 மணியளவில் ராஜபாளைத்தில் உள்ள வேதபாடசாலையில் அவர் மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்கு இன்று(12–ந்தேதி) நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

ராம்கோ நிறுவனர் பி.ஏ.சி. ராமசாமி ராஜாவின் மகனான இவர், இவர் கடந்த 1935–ம் ஆண்டு பிறந்தார். கடந்த 50 ஆண்டுகளாக ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவராக இருந்து வந்தார். இவருக்கு சுதர்சனம் என்ற மனைவியும், வெங்கட்ராம ராஜா என்ற மகனும், தீபா, நளினா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

கடைகள் மூடப்படுகிறது

ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் ராஜபாளையத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் இன்று மூடப்படுகிறது.


Next Story