சப்தஸ்தான விழாவையொட்டி ஐயாறப்பர் கண்ணாடி பல்லக்கில் ஏழூர் புறப்பட்டார்
திருவையாறில் ஐயாறப்பர் கோவிலில் சப்தஸ்தான விழா நடைபெற்றது. இதில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கில் ஏழூர் புறப்பட்டார். பொம்மை பூபோடும் நிகழ்ச்சி இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
திருவையாறு.
தஞ்சை மாவட்டம் திருவையாறில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை விழா கடந்த மாதம்(ஏப்ரல்) 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து கடந்த 4-ந் தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 8-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான விழா நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர்் பல்லக்கிலும் கோவிலில் இருந்து புறப்பட்டு, கோபுர தரிசனம் நடைபெற்றது. இதை தொடர்ந்து பல்லக்கு ஏழூர்் புறப்பட்டு சென்றது. தொடர்ந்து இரவு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் காவிரி ஆற்றில் சங்கமித்தது. பின்னர் தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெற்றது.
பொம்மை பூபோடும் நிகழ்ச்சி
இன்று (வெள்ளிக்கிழமை) தில்லைஸ்தானம் பல்லக்குடன் 6 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூபோடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் இளைய சன்னிதானம் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்் சிவராஜ,் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story