அருப்புக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் பெண்கள் முற்றுகை
அருப்புக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே வேல்முருகன் காலனி பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு தொடக்க நிலையில் இருந்தே அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தொழிலாளர்கள் மிகுந்த பகுதியில் டாஸ்மாக் கடையினை திறப்பதால் பலவகையிலும் பாதிப்பு ஏற்படும் என்று கூறினார்கள்.
மேலும் அந்த கடையினை முற்றுகையிட்டு கடந்தவாரம் போராட்டம் நடத்தினார்கள். மேலும் கடந்த திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து கலெக்டர் சிவஞானத்திடமும் முறையிட்டனர்.
மீண்டும் போராட்டம்
இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு டாஸ்மாக் கடையினை முற்றுகையிட்டனர். கடையினை திறக்க ஊழியர்கள் வந்த நிலையில் அவர்களை கடையின் அருகே கூட பெண்கள் அனுமதிக்க மறுத்து விட்டனர்.
தகவல் அறிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் அங்கு விரைந்து வந்தார். அவர் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.