மீஞ்சூர் அருகே பொதுமக்களின் போராட்டத்தால் மதுக்கடைக்கு ‘சீல்’ வைப்பு
திருவெள்ளைவாயல் கிராமத்தில் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மீஞ்சூர்,
மீஞ்சூர் அருகே உள்ள திருவெள்ளைவாயல் கிராமத்தில் மதுக்கடை செயல்பட்டு வந்தது. இதையடுத்து நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்டூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் மதுக்கடையை பூட்டி சீல் வைத்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பொன்னேரியை அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் கடையின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கடையை மூடினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்ற நிலையில் மாலையில் மீண்டும் கடை திறக்கப்பட்டது.

Related Tags :
Next Story