சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா பக்தர்கள் காவடி எடுத்தனர்


சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா பக்தர்கள் காவடி எடுத்தனர்
x
தினத்தந்தி 12 May 2017 4:00 AM IST (Updated: 12 May 2017 12:25 AM IST)
t-max-icont-min-icon

எட்டுக்குடி சுப்பிர மணிய சுவாமி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி திரளான பக்தர்கள் காவடி எடுத்தனர்.

வேளாங்கண்ணி,

திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் சுப்பிர மணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு விழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொக்கரித்த வினாயகருக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங் களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமியையொட்டி வேல் நெடுங்கண்ணி அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, ரத காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று சண்டிகேஸ்வரருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Related Tags :
Next Story