தனியாக நடந்து செல்லும் இளம்பெண்களை கேலி-கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


தனியாக நடந்து செல்லும் இளம்பெண்களை கேலி-கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 May 2017 4:30 AM IST (Updated: 12 May 2017 12:34 AM IST)
t-max-icont-min-icon

தனியாக நடந்து செல்லும் இளம்பெண்களை கேலி-கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோவை

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சிக்கலாம்பாளையம் சக்தி நகர் என்ற கிராமம் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் நேற்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ஹரிகரனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கேலி-கிண்டல்

நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதிதாக 20 பேர் தங்கள் குடும்பத்துடன் வந்து வீடு கட்டினார்கள். அவர்கள் அனைவரும் பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் வேலை செய்து வருகிறார்கள்.

அவர்கள் வீடுகள் வழியாக எங்கள் பகுதியை சேர்ந்த இளம் பெண்கள் தனியாக நடந்து சென்றால், அவர்களைகேலி-கிண்டல் செய்து அவதூறாக பேசுகிறார்கள். இதுகுறித்து நாங்கள் கேட்டால் எங்களை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டுகிறார்கள்.

கடும் நடவடிக்கை

நாங்கள் அனைவருமே வேலைக்கு சென்றால்தான் எங்கள் குடும்பத்தை காப்பாற்ற முடியும். இதை கருத்தில் கொண்டு எங்கள் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று வருகிறோம். ஆனால் கடந்த ஒரு மாதமாக அந்த நபர்கள் கொடுக்கும் தொல்லை காரணமாக நாங்கள் வேலைக்கு செல்ல முடிவது இல்லை.

எனவே தாங்கள், அந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தரக்குறைவான பேச்சு

வன உரிமை சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி சப்- கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 8-ந் தேதி நடந்தது. அப்போது சர்க்கார்பதி, பழைய சர்க்கார்பதி, நாகரூத்து, புளியங்கண்டி, சின்னார்பதி ஆகிய பகுதிகளை சேர்ந்த வனகிராம மக்கள் சில விண்ணப்பங் களை வாங்க அங்கு சென் றனர். அப்போது அங்கு இருந்த அதிகாரி ஒருவர் அவர் களை தரக்குறைவாக பேசி, திட்டி அனுப்பி விட்டார். என வே அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஹரிகரன், இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

Next Story