பொள்ளாச்சியில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 75 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு
பொள்ளாச்சியில் ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று 75 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப்பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சியில் கோவை ரோட்டில் உள்ள ராமானுஜர் வீதியைச் சேர்ந்தவர் பொற்கொடி(வயது 64). இவருடைய கணவர் நாகராஜ். இவர் பொள்ளாச்சி அருகே உள்ள தேவம்பாடிவலசு அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
கணவர் இறந்ததும் பொற்கொடி மட்டும் தனக்கு சொந்தமான காம்பவுண்டில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு சொந்தமாக 4 வீடுகள் உண்டு. மற்ற வீடுகளில் இருந்து வாடகை பணம் பெற்று வந்தார்.
75 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு
இந்த நிலையில் சென்னையில் இருந்து வந்த அவருடைய தங்கை மனோன்மணியை அழைத்துக் கொண்டு உடுமலையில் வசிக்கும் மற்றொரு தங்கையான தமிழ்செல்வி வீட்டிற்கு கடந்த 9-ந் தேதி பொற்கொடி சென்றார்.
இந்த நிலையில், நேற்று காலை பொற்கொடியின் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த காம்பவுண்டில் வசித்த அக்கம், பக்கத்து வீட்டினர் இது குறித்து அவருக்கு போனில் தகவல் தெரிவித்தனர். உடனடியாக பொள்ளாச்சி திரும்பி வந்த பொற்கொடி வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 75 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
போலீசார் விசாரணை
இது குறித்து பொள்ளாச்சி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொற்கொடி மற்றும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் முதற்கட்டவிசாரணை நடத்தினார்கள். கோவையில் இருந்து வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தார். பொள்ளாச்சி- கோவை மெயின் ரோட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் சந்தில் அதுவும் காம்பவுண்டிற்குள் மர்ம ஆசாமிகள் புகுந்து துணிகரமாக வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கைவரிசையை காட்டி சென்று இருப்பது போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழிப்புணர்வு தேவை
கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்களில் பாதிக்கப்படாமல் இருக்க பொதுமக்கள் தங்களிடம் ஒரு சில நகைகள் தவிர மற்றவற்றை வங்கி பாதுகாப்பு பெட்டகங்களில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். முக்கிய நிகழ்ச்சிக்கு செல்லும் போதோ அல்லது தேவைப்படும் போதோ வங்கி பெட்டகங்களில் இருந்து எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதேபோல் அதிக பணம் வீட்டில் வைத்து இருப்பதும் ஆபத்து தான்.
செலவுக்கு குறிப்பிட்ட தொகை போக மீதம் உள்ளபணத்தை வங்கி கணக்கில் சேமித்து வைத்து தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தலாம். இது குறித்து போலீசார் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள், முக்கிய இடங்களில் விளம்பர பலகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் பணம் மற்றும் நகைகளை திருடர்களிடம் பொதுமக்கள் பறிகொடுப்பது தொடர் கதையாக தான் உள்ளது.இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story