திருவள்ளூர் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.7½ லட்சம் மதுபாட்டில்கள் அழிப்பு
திருவள்ளூர் அருகே மூடுவதாக அறிவித்த மதுபானக்கடையில் தொடர்ந்து மதுவிற்பனை நடந்ததால் டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.7½ லட்சம் மதுபாட்டில்கள் அழிப்பு.
திருவள்ளூர்,
திருவள்ளூர் அருகே மூடுவதாக அறிவித்த மதுபானக்கடையில் தொடர்ந்து மதுவிற்பனை நடந்ததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் அந்த கடையின் ஷட்டரை உடைத்து, அங்கு இருந்த ரூ.7½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை நடுரோட்டில் போட்டு உடைத்து அழித்தனர்.
பெண்களின் ஆவேச போராட்டத்தை பார்த்த போலீசார் செய்வதறியாமல் திகைத்தனர்.
மூடாத மதுக்கடை...
திருவள்ளூரை அடுத்த நாராயணபுரம் கூட்டுசாலை அருகே இருந்த மதுபானக்கடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் மூடப்பட்டது. அந்த கடை அரக்கோணம் செல்லும் சாலையில் சமீபத்தில் திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நாராயணபுரம் மற்றும் வரதாபுரம் பகுதியை சேர்ந்த பொது மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது அதிகாரிகள் ஒரு வார காலத்துக்குள் இந்த மதுக்கடை மூடப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் அறிவித்தபடி அந்த மதுபானக்கடை மூடப்படவில்லை. அந்த கடைக்கு ஏராளமானவர்கள் வந்து மதுபாட்டில்களை வாங்கி சென்ற வண்ணம் இருந்தனர்
இதனால் ஆத்திரம் அடைந்த நாராயணபுரம், வரதாபுரம், மஞ்சாக்குப்பம், சின்னமஞ்சாக்குப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்கள், பொது மக்கள் மதுக்கடை முன் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வந்தனர். உடனே அந்த கடையை ஊழியர்கள் அடைத்து விட்டு சென்றனர்.
ஷட்டரை உடைத்து
மதுபாட்டில்கள் அழிப்பு
மூடப்பட்ட அந்த மதுபானக்கடை முன் 200–க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த பெண்கள் மற்றும் பொது மக்கள் அங்கிருந்த பெரிய பெரிய கற்களை எடுத்து பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடையின் ஷட்டரை அடித்து நொறுக்கினார்கள். சிலர் இரும்பு கம்பியால் கடையின் ஷட்டரை உடைத்தனர்.
இதில் கடையின் ஷட்டர் உடைந்தது. இதைத்தொடர்ந்து உள்ளே சென்ற பெண்கள், ஆண்கள் என அனைவரும் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் தூக்கி வெளியே கொண்டு வந்து நடுரோட்டில் போட்டு உடைத்தனர். இந்த சம்பவத்தில் ஒரு பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தள்ளுமுள்ளு
பெண்களின் ஆவேச போராட்டத்தினால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அவர்கள் இந்த தாக்குதலை பார்த்து செய்வதறியமால் திகைத்தபடி நின்றனர். இதுபற்றி போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்தனர். அவரது உத்தரவின்பேரில் உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
அங்கு வந்த போலீசார் போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கடையை நிரந்தரமாக மூடும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என அவர்கள் போலீசாரிடம் கூறினர். அப்போது போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் மாலையில் அனைவரும் கலைந்து சென்றனர்.
டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து மதுபாட்டில்களை உடைத்து பொது மக்கள் சூறையாடியதில் மொத்தம் ரூ.7½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் சேதம் அடைந்தது. இதுபற்றி திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Related Tags :
Next Story