பெங்களூருவில் நவீன வசதிகளுடன் கூடிய ஸ்டூடியோ சித்தராமையா திறந்து வைத்தார்


பெங்களூருவில் நவீன வசதிகளுடன் கூடிய ஸ்டூடியோ சித்தராமையா திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 12 May 2017 3:00 AM IST (Updated: 12 May 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் உள்ள முதல்–மந்திரி சித்தராமையாவின் இல்லமான கிருஷ்ணாவில் காட்சி ஊடகங்களுக்காக பிரத்தியேகமாக நவீன வசதிகளுடன் கூடிய ஒரு ஸ்டூடியோ கர்நாடக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் உள்ள முதல்–மந்திரி சித்தராமையாவின் இல்லமான கிருஷ்ணாவில் காட்சி ஊடகங்களுக்காக பிரத்தியேகமாக நவீன வசதிகளுடன் கூடிய ஒரு ஸ்டூடியோ கர்நாடக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்டூடியோ திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, அந்த ஸ்டூடியோவை திறந்து வைத்தார்.

காட்சி ஊடகங்களின் தேவையை புரிந்து கொண்டு, இந்த நவீன வசதிகளுடன் கூடிய ஸ்டூடியோவை அமைத்துள்ளதாக சித்தராமையா கூறினார். இதில் நவீன தொழில்நுட்ப வசதிகள் இதில் செய்யப்பட்டுள்ளது. காட்சி ஊடகங்கள் முதல்–மந்திரியை நேர்காணல் எடுப்பதாக இருந்தால், அந்த ஸ்டூடியோவில் எடுக்க அனுமதிக்கப்படும்.

அந்த ஸ்டூடியோவுக்கு வருணா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதில் இருக்கை வசதிகள், வெளிச்சம் தரும் விளக்குகள், கணினிகள், டெலிபிராம்டர் போன்ற பல்வேறு உபகரணங்கள் அங்குள்ளன. காட்சி ஊடகத்தினர் கேமராவுடன் மட்டும் வந்தால் போதுமானது. அந்த வசதிகளை பயன்படுத்தி நேரிடையாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடியும். அவர்கள் நேரடி ஒளிபரப்பு சாதனங்களை அங்கு கொண்டுவர தேவை இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story