கண்ணாடி பாட்டில் விளக்கு தவறி விழுந்ததில் பள்ளி மாணவியின் உடல் கருகியது
பெரம்பலூர் அருகே தம்பிரான்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நவசெல்வம். டிரைவர். இவருடைய மகள் தமிழ்செல்வி (வயது 14). அப்பகுதியில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் தமிழ்செல்வி 9–ம் வகுப்பு படித்திருந்தாள்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே தம்பிரான்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நவசெல்வம். டிரைவர். இவருடைய மகள் தமிழ்செல்வி (வயது 14). அப்பகுதியில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் தமிழ்செல்வி 9–ம் வகுப்பு படித்திருந்தாள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின்சாரம் இல்லாததால் சமையலறையில் இருந்த கண்ணாடி பாட்டில் விளக்கை எடுத்து பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த விளக்கு தவறி விழுந்ததில் கண்ணாடி பாட்டில் கீழே விழுந்து உடைந்தது. மேலும் அதில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த மண்எண்ணெய் சிதறி அங்கு நின்று கொண்டிருந்த தமிழ்செல்வியின் மீது பட்டதால் அவரது உடலில் தீ பற்றியது. இதனால் வலி தாங்க முடியாமல் அவள் அலறினாள். இதைக்கண்ட வீட்டிலிருந்தவர்கள் தமிழ்செல்வியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு தமிழ்செல்வி அனுப்பி வைக்கப்பட்டாள். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஆரோக்கியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.