‘அன்பு பாலம் ஐம்பெரும் விழா’ சென்னையில் நடந்தது
‘அன்பு பாலம் ஐம்பெரும் விழா’ சென்னை அசோக்நகரில் உள்ள லட்சுமி ஹாலில் நடைபெற்றது.
சென்னை,
பாலம் கலியாணசுந்தரத்தின் 78–வது பிறந்தநாள் விழா, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா, அன்பு பாலம் மாத இதழின் 10–வது ஆண்டு விழா, நலத்திட்ட உதவிகள், சான்றோருக்கு விருது வழங்கும் விழா என ‘அன்பு பாலம் ஐம்பெரும் விழா’ சென்னை அசோக்நகரில் உள்ள லட்சுமி ஹாலில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு தொழில் அதிபர் நல்லி குப்புசாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களை அன்பு பாலம் தலைவர் பா.கலியாணசுந்தரம் சிறப்பு செய்தார். இதில் திராவிட தமிழர் இயக்க பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், மூத்த வக்கீல் காந்தி, எழுத்தாளர்கள் சிவசங்கரி, லேனா தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில், பாலம் கலியாணசுந்தரத்தின் முத்துவிழாவை முன்னிட்டு மக்கள் நலப்பணிக்காக யாரிடமும் ஒரு ரூபாய் கூட நன்கொடை பெறாமல் ரூ.80 கோடி நிதி திரட்டும் விழா, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு சர்வதேச தமிழ் டிஜிட்டல் நூலக திட்ட விழா, காந்தியின் 150–வது பிறந்தநாளில் உலகெங்கிலும் 200–க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் ரூ.10 ஆயிரம் கோடி நிதி திரட்டும் விழா ஆகியவற்றை தொடங்கி வைத்தனர்.
தங்கரத்னா விருது, பத்திரிகையாளர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் விழாவில் வழங்கப்பட்டன.

Related Tags :
Next Story