ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய பெண்கள் மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய பெண்கள் மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 12 May 2017 4:30 AM IST (Updated: 12 May 2017 1:45 AM IST)
t-max-icont-min-icon

நெடுவாசலில் பெண்கள் மடியேந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை

வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 2-வது கட்டமாக கடந்த மாதம் 12-ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே நேற்று 30-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில், பெண்கள் மடியேந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிறுவர்- சிறுமிகளும் கலந்து கொண் டனர். அப்போது அவர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி கோஷங்கள் எழுப்பினர். 

Related Tags :
Next Story