சென்னை நகர போலீசாருக்கு புதிதாக 500 வீடுகள் கட்ட திட்டம்


சென்னை நகர போலீசாருக்கு புதிதாக 500 வீடுகள் கட்ட திட்டம்
x
தினத்தந்தி 12 May 2017 3:45 AM IST (Updated: 12 May 2017 1:47 AM IST)
t-max-icont-min-icon

சென்னை நகரில் உள்ள போலீஸ் குடியிருப்புகள் மேம்பாடுகள் குறித்தும் சென்னை நகர போலீஸ் கமி‌ஷனர் கரன் சின்கா முக்கிய ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

சென்னை நகரில் வாடகை கட்டிடங்களில் செயல்படும் போலீஸ் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டுவது தொடர்பாகவும், சென்னை நகரில் உள்ள போலீஸ் குடியிருப்புகள் மேம்பாடுகள் குறித்தும் சென்னை நகர போலீஸ் கமி‌ஷனர் கரன் சின்கா முக்கிய ஆலோசனை நடத்தினார். போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் வீட்டு வசதி வாரிய கூடுதல் டி.ஜி.பி. ‌ஷகீல் அக்தர், சென்னை தலைமையிட கூடுதல் கமி‌ஷனர் சேஷாயி, சென்னை நிர்வாக பிரிவு துணை கமி‌ஷனர் ராதிகா உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

வாடகை கட்டிடங்களில் செயல்படும் போலீஸ் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டுவது தொடர்பாக ஏற்கனவே அரசு பிறப்பித்த ஆணையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சொந்த கட்டிட பணிகளை உடனடியாக தொடங்கவும் திட்டமிடப்பட்டது. சென்னை நகரில் போலீசாருக்கு புதிதாக 500 வீடுகள் கட்டுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 500 வீடுகளை கட்டுவதற்கும் உடனடியாக உரிய இடங்களை தேர்வு செய்து கட்டுமான பணியை தொடங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் குடியிருப்புகளை சீர் செய்து அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும் அதிகாரிகளுக்கு கமி‌ஷனர் கரன் சின்கா ஆணை பிறப்பித்தார். இதற்காக ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.  போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தையும் கமி‌ஷனர் கரன் சின்கா தொடங்கிவைத்தார்.

Next Story