சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம்: விவசாயிகள் புறப்பட்டு சென்றனர்


சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம்: விவசாயிகள் புறப்பட்டு சென்றனர்
x
தினத்தந்தி 12 May 2017 4:30 AM IST (Updated: 12 May 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம்: அரியலூரில் இருந்து ரெயில் மூலம் விவசாயிகள் புறப்பட்டு சென்றனர்

தாமரைக்குளம்,

விவசாயிகள் வறட்சியால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். உயர்நீதிமன்றம் உத்தரவுபடி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக அனைத்து விவசாய சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.இதில் கலந்து கொள்வதற்காக காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் தூத்தூர் தங்க தர்மராஜ் தலைமையில் விவசாயிகள் 25 பேர் அரியலூர் ரெயில் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை புறப்பட்டு சென்றனர். 

Related Tags :
Next Story