புதுச்சேரியில் பயங்கரம்: தொழில் அதிபர் வெட்டிக்கொலை
புதுச்சேரியில் தொழில் அதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு உடல் பிளாஸ்டிக் பையில் வைத்து புதைக்கப்பட்டது. இதுதொடர்பாக தலைமறைவானவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வானூர்,
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் விவேக் பிரசாத் (வயது 40). தொழில் தொடங்க முடிவு செய்து கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அவர் புதுச்சேரி வந்தார். ரெட்டியார்பாளையம் ராகவேந்திரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி ஜெயந்தி (35) மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
புதுச்சேரி மாநிலத்தை அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர்பான பாட்டில்களுக்கான மூடி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்து விவேக் பிரசாத் இடம் வாங்கினார். அங்கு தொழிற்சாலை தொடங்குவதற்கான கட்டுமானப் பணிகளை அவர் மேற்கொண்டு வந்தார்.
மே தினமான கடந்த 1-ந் தேதி வீட்டில் இருந்து விவேக் பிரசாத் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு அவர் திரும்பிவரவில்லை. செல்போனிலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ரெட்டியார்பாளையம் போலீசில் கணவர் விவேக் பிரசாத்தை காணவில்லை என அவரது மனைவி ஜெயந்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.
சாவியுடன் நின்ற மோட்டார் சைக்கிள்
இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி புதுவை வம்பாக்கீரப்பாளையம் கடற்கரை பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிள் சாவியுடன் கேட்பாரற்று நிற்பதாக புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று அந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த மோட்டார் சைக்கிள் தொழில் அதிபர் விவேக் பிரசாத்துக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மாயமான விவகாரம் குறித்த விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினார்கள். இதில் தொழிற்சாலை தொடங்க நிலம் வாங்கியது உள்பட பல்வேறு தேவைகளுக்காக விவேக் பிரசாத்துக்கு வில்லியனூர் அருகே உள்ள சுல்தான்பேட்டையை சேர்ந்த பாபு என்பவர் உதவி செய்து இருப்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
குட்டு உடைந்தது
முதலில் விவேக் பிரசாத் மாயமானது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று போலீசாரிடம் பாபு தெரிவித்தார். மீண்டும் அவரை விசாரணைக்கு அழைத்த போது பாபு தலைமறைவானார். இதனால் போலீசாருக்கு அவர் மீதான சந்தேகம் வலுத்தது.
இதையொட்டி தொழிற்சாலை கட்டுமானப் பணியை ஒப்பந்தம் எடுத்து செய்து வந்த கட்டிட மேஸ்திரி கணபதியிடம் போலீசார் விசாரித்தனர். போலீசில் அவர் கூறுகையில், மே தின விடுமுறை நாள் என்பதால் கடந்த 1-ந்தேதி கட்டுமானப் பணிகள் நடக்கவில்லை. இந்தநிலையில் எனக்கு (மேஸ்திரிக்கு) போன் செய்த பாபு, தனக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனே தொழிற்சாலை கட்டுமானப் பணி நடக்கும் இடத்துக்கு வருமாறு கூறினார். இதை நம்பி நான் அங்கு சென்றேன். ஆனால் பாபுவுக்கு அவர் கூறியது போல் காயமோ கால் முறிவோ ஏற்படவில்லை. இதனால் பொய் சொன்னது ஏன்? என்று கேட்ட போது, விவேக் பிரசாத்தை கொலை செய்துவிட்டதாகவும் இந்த விஷயத்தில் தனக்கு உதவுமாறும் பாபு கேட்டுக் கொண்டார். நான் அதற்கு மறுத்து விட்டு, அங்கிருந்து வந்து விட்டேன் என்று தெரிவித்தார்.
அவரது இந்த தகவலால் விவேக் பிரசாத்துக்கு ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்ற குட்டு உடைந்தது.
பிளாஸ்டிக் பையில் திணிக்கப்பட்ட உடல்
இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் தொழிற்சாலை கட்டுமானப் பணி நடந்த இடத்துக்கு கணபதியை அழைத்துச் சென்று பார்வையிட்டனர். அங்கு கழிவறை தொட்டி கட்டப்பட்ட இடத்தில் புதிதாக மண்கொட்டப்பட்டு மேடாக்கப்பட்டு இருந்தது. அது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த இடத்தை தோண்டிப் பார்க்க முடிவு செய்தனர்.
இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் புதுச்சேரி வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங், வானூர் தாசில்தார் பிரபாகரன் மற்றும் விவேக் பிரசாத்தின் மனைவி ஜெயந்தி, அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர் ராஜேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் முன்னிலையில் மண் மூடிக்கிடந்த கழிவறை தொட்டி தோண்டப்பட்டது.
அங்கு பள்ளம் தோண்டிய இடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. தொடர்ந்து அங்கு தோண்டியபோது நீலநிறத்தில் ஒரு பெரிய பிளாஸ்டிக் பை கிடந்தது. அதை பிரித்துப் பார்த்ததில் உட்கார்ந்த நிலையில் விவேக் பிரசாத் வெட்டிக் கொலை செய்யப்பட்டு உடல் திணிக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அடையாளம் காட்டினார்
அழுகிய நிலையில் இருந்த அவரது உடலை விவேக் பிரசாத்தின் மனைவி ஜெயந்தி அடையாளம் காட்டினார். இதன்பின் அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக விவேக்பிரசாத்தின் உடல் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விவேக் பிரசாத்தை கொலை செய்து விட்டு தலைமறைவான பாபுவை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். அவரை பிடித்து விசாரிக்கும் போது இந்த கொலையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

Related Tags :
Next Story