நரிமன்பாயிண்ட்- காந்திவிலி இடையே 35.6 கிலோ மீட்டரில் அமைகிறது மும்பை கடற்கரை சாலை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
நரிமன்பாயிண்ட் - காந்திவிலி இடையே 35.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமையும் மும்பை கடற்கரை சாலை திட்டத்திற்கு மத்திய அரசு இறுதி ஒப்புதலை அளித்தது.
மும்பை,
நரிமன்பாயிண்ட் - காந்திவிலி இடையே 35.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமையும் மும்பை கடற்கரை சாலை திட்டத்திற்கு மத்திய அரசு இறுதி ஒப்புதலை அளித்தது. இதற்காக பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நன்றி தெரிவித்தார். மும்பை கடற்கரை சாலை திட்டம் நகர மக்களின் நீண்ட கால கனவு திட்டமாகும்.
4 வழிச்சாலை
தெற்கு மும்பை மற்றும் வடக்கு மும்பையை இணைக்கும் வகையில் தென்மும்பையில் உள்ள நரிமன்பாயிண்ட் முதல் வடமும்பையில் உள்ள காந்திவிலி வரையிலும் 35.6 கி.மீ. தூரத்திற்கு கடற்கரை சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த கடற்கரை சாலை திட்டம் ரூ.12 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
கடற்கரை சாலை 4 வழிப்பாதைகளுடன் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அந்தேரி, கோரேகாவ், மலாடு, சாந்தாகுருஸ் போன்ற மேற்கு புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எளிதில் தென்மும்பை பகுதிக்கு வர முடியும். மேலும் மும்பை நகர்புற சாலைகளில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலும் பாதியாக குறையும்.
2 கட்டமாக...
கடற்கரை சாலை திட்டத்திற்காக அதிக அளவில் சதுப்பு நிலக்காடுகள் அழிக்கப்படவேண்டியது இருக்கும் என்பதால் இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்காமல் இருந்தது.
மேலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியது. அதில் கடற்கரை சாலை திட்டம் தொடர்பாக, மாநில கடற்கரை மண்டல நிர்வாக ஆணையம், சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு சமர்ப்பித்த சிபாரிசில் பல தவறுகள் இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து இந்த திட்டத்திற்கு ஒப்புதல் பெற மும்பை மாநகராட்சி அதிகாரிகள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை பல முறை சந்தித்து பேசினார்கள்.
மேலும் மாநகராட்சி கடற்கரை சாலை திட்டத்தை 2 கட்டங்களாக நிறைவேற்ற முடிவு செய்தது. முதல் கட்டமாக மெரின்லைனில் இருந்து பாந்திரா ஒர்லி கடல் வழி மேம்பாலம் வரையிலும், 2-ம் கட்டமாக பாந்திராவில் இருந்து காந்திவிலிக்கு கடற்கரை சாலை போடுவது என திட்டமிடப்பட்டு உள்ளது.
இறுதி ஒப்புதல்
இந்தநிலையில், மும்பை கடற்கரை சாலை திட்டத்துக்கு மத்திய அரசு தனது இறுதி ஒப்புதலை அளித்து உள்ளது. இதை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி மேலும் அவர் கூறியிருப்பதாவது:-
மும்பைக்கு நல்ல செய்தி. மும்பையில் செயல்படுத்தப்படும் கடற்கரை சாலை திட்டத்துக்கு மத்திய அரசு இறுதி ஒப்புதல் அளித்து உள்ளது.
கடற்கரை சாலை திட்டத்தின் மூலம் மேற்கு விரைவு சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மற்றும் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுகள் இந்த திட்டம் பற்றி 15 ஆண்டுகள் பேசிக் கொண்டு தான் இருந்தார்கள்.
பிரதமருக்கு நன்றி
ஆனால் நாங்கள் சாலை திட்டத்திற்கு இரண்டு ஆண்டுகளிலேயே ஒப்புதல் பெற்று விட்டோம். கடற்கரை சாலை திட்டத்திற்கு அனுமதி அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி அனில் தாவே ஆகியோருக்கு நன்றி.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசு இறுதி ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம் மும்பை கடற்கரை சாலை திட்டத்திற்கான பணிகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணிகள் தொடங்கிய 2 வருடத்திற்குள் கடற்கரை சாலையை அமைத்து முடிக்க மாநகராட்சி திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story