சயான்கோலிவாடா, செம்பூர் பஞ்சாபி கேம்பில் வசிப்பவர்களுக்கு புதிய கட்டிடங்களில் வீடுகள் வழங்கப்படும் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு


சயான்கோலிவாடா, செம்பூர் பஞ்சாபி கேம்பில் வசிப்பவர்களுக்கு புதிய கட்டிடங்களில் வீடுகள் வழங்கப்படும் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 May 2017 3:33 AM IST (Updated: 12 May 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

சயான்கோலிவாடா, செம்பூர் பஞ்சாபி கேம்பில் வசிப்பவர்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வீடுகள் வழங்கப்படும் என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்து உள்ளார்.

மும்பை,

சயான்கோலிவாடா, செம்பூர் பஞ்சாபி கேம்பில் வசிப்பவர்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வீடுகள் வழங்கப்படும் என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்து உள்ளார்.

பஞ்சாபி கேம்ப் கட்டிடங்கள்

இந்தியா–பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்து மும்பைக்கு வந்த சீக்கியர்களுக்கு சயான் கோலிவாடா மற்றும் செம்பூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டன. சயான் கோலிவாடாவில் மட்டும் 25 கட்டிடங்களில் ஏராளமான சீக்கியர்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த குடியிருப்புகள் பஞ்சாபி கேம்ப் என் அழைக்கப்படுகின்றன.

தற்போது இந்த கட்டிடங்கள் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. இந்த கட்டிடங்களை சீரமைத்து கட்டி தருவதாக கட்டுமான அதிபர்கள் பலர் தெரிவித்தனர். ஆனால் யாரும் அந்த பணிகளை செய்ய முன்வரவில்லை.

தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

இந்தநிலையில் அங்கு வசிப்பவர்களுக்கு அரசு தரப்பில் புதிதாக கட்டிடங்கள் கட்டி வீடுகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று சயான் கோலிவாடா தொகுதி பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ்ச்செல்வன் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

முதல்–மந்திரியின் ஆலோசனைப்படி அந்த கட்டிடங்களை சீரமைப்பதற்காக கமிட்டி அமைக்கப்பட்டது. அதில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. உள்பட 12 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

புதிய கட்டிடங்கள்

இந்தநிலையில், சீக்கிய மக்கள் வசிக்கும் அந்த கட்டிடங்களை சீரமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நடந்தது. இதில் மாநில வீட்டு வசதித்துறை மந்திரி பிரகாஷ் மேத்தா, மாநகராட்சி கமி‌ஷனர் அஜாய் மேத்தா, மகாடா அதிகாரிகள், கட்டிட சீரமைப்பு கமிட்டி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தின் போது, சயான் கோலிவாடா மற்றும் செம்பூரில் வசிக்கும் சீக்கிய மக்களின் பழுதடைந்த சிந்தி கேம்ப் கட்டிடங்களை இடித்துவிட்டு அதே இடத்தில் மகாடா சார்பில் புதிதாக கட்டிடங்கள் கட்டி வீடுகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதற்கான பூமி பூஜை இந்த மாதத்திற்குள் நடத்தப்படும் என்றும் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

இந்த தகவலை கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.


Next Story