உதயன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேட்பாரற்று கிடந்த பெட்டியில் ரூ.37 லட்சம் மீட்பு ஹவாலா பணமா? போலீசார் விசாரணை


உதயன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேட்பாரற்று கிடந்த பெட்டியில் ரூ.37 லட்சம் மீட்பு ஹவாலா பணமா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 May 2017 4:00 AM IST (Updated: 12 May 2017 3:59 AM IST)
t-max-icont-min-icon

உதயன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேட்பாரற்று கிடந்த பெட்டியில் ரூ.37 லட்சத்தை போலீசார் மீட்டனர்.

மும்பை,

உதயன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேட்பாரற்று கிடந்த பெட்டியில் ரூ.37 லட்சத்தை போலீசார் மீட்டனர். இது ஹவாலா பணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேட்பாரற்று கிடந்த பெட்டி


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மும்பை நோக்கி உதயன் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் நேற்றுமுன்தினம் கல்யாண் ரெயில் நிலையத்தை நெருங்கி கொண்டிருந்த போது பி1 ஏ.சி. பெட்டியில் கேட்பாரற்று சிறிய பெட்டி ஒன்று கிடந்தது.

இதை கவனித்த பயணிகள் சந்தேகம் அடைந்தனர். இதுபற்றி அவர்கள் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்தனர்.

ரூ.37 லட்சம்

உடனே அவர் இதுபற்றி ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். ரெயில் கல்யாண் ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும், அங்கு தயாராக நின்று கொண்டிருந்த ரெயில்வே போலீசார் பி1 ஏ.சி. பெட்டியில் ஏறி அங்கு கிடந்த பெட்டியை கைப்பற்றி திறந்து பார்த்தனர்.

அப்போது அந்த பெட்டிக்குள் 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கத்தை, கத்தையாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த ரூபாய் நோட்டுகளை எண்ணி பார்த்த போது மொத்தம் ரூ.37 லட்சம் இருப்பது தெரியவந்தது. அந்த பணத்தை விட்டு சென்றது யார்? அது ஹவாலா பணமா? என்பதை கண்டறிய ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story