அதிக வட்டி தருவதாக கூறி ரூ.4 கோடி மோசடி அரசு அதிகாரியின் மனைவி கைது
அதிக வட்டி தருவதாக கூறி 25 பேரிடம் ரூ.4 கோடி மோசடி செய்த அரசு அதிகாரியின் மனைவியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மும்பை,

அதிக வட்டி
மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் சுனிதா சர்மா(வயது46). இவரது கணவர் அரசு அதிகாரியாக உள்ளார். சுனிதா சர்மா தன்னுடன் வேலை பார்க்கும் மற்ற பெண் ஊழியர்களிடம் தன்னிடம் பணம் முதலீடு செய்தால் அந்த பணத்திற்கு அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய கிருஷ்டி என்ற பெண் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் வரை கொடுத்து இருக்கிறார்.
இதற்கான வட்டி தொகைக்காக சுனிதா சர்மா காசோலை கொடுத்து உள்ளார். ஆனால் அந்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்ததால் கிருஷ்டி ஏமாற்றம் அடைந்தார்.
கைது
இதுபற்றி கேட்க சென்றபோது சுனிதா சர்மா தலைமறைவானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பி.கே.சி. போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் சுனிதா சர்மா இதேபாணியில் மொத்தம் 25 பேரிடம் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.4 கோடி அளவில் மோசடி செய்தது தெரியவந்தது. பின்னர் இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டது.
இந்தநிலையில் போலீசார் சுனிதா சர்மாவை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15-ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார்.

Related Tags :
Next Story