பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியீடு: தஞ்சை மாவட்டத்தில் 91.63 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி கடந்த ஆண்டை விட 1.49 சதவீதம் அதிகம்
பிளஸ்–2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
தஞ்சாவூர்,
பிளஸ்–2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த 3 கல்வி மாவட்டங்களிலும் 97 அரசு பள்ளிகள், 37 அரசு உதவி பெறும் பள்ளிகள், 74 மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 208 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுதினர்.
மாணவிகள் 17 ஆயிரத்து 346 பேரும், மாணவர்கள் 13 ஆயிரத்து 973 பேரும் என மொத்தம் 31 ஆயிரத்து 319 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 12 ஆயிரத்து 351 பேரும், மாணவிகள் 16 ஆயிரத்து 348 பேரும் என மொத்தம் 28 ஆயிரத்து 699 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.63 ஆகும்.
கடந்த ஆண்டை விட அதிகம்கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 90.14 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.49 சதவீதம் கூடுதலாக மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தஞ்சை கல்வி மாவட்டத்தில் 12 பள்ளிகளும், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 8 பள்ளிகளும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 10 பள்ளிகளும் என மொத்தம் 30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன என தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சுபாஷினி தெரிவித்தார்.