வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 85 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி
பிளஸ்-2 பொதுத்தேர்வில் வேலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 44 ஆயிரத்து 950 மாணவ- மாணவிகளில் 37 ஆயிரத்து 897 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வேலூர்,
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது. வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 331 பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரத்து 952 மாணவர்கள், 23 ஆயிரத்து 901 மாணவிகள் என மொத்தம் 44 ஆயிரத்து 853 மாணவ- மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 2 கல்வி மாவட்டங்களிலும் சேர்த்து 20 ஆயிரத்து 841 மாணவர்கள், 23 ஆயிரத்து 749 மாணவிகள் என மொத்தம் 44 ஆயிரத்து 590 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
85 சதவீதம் தேர்ச்சி
வேலூர் மாவட்டத்திற்கான தேர்வு முடிவை முதன்மை கல்வி அலுவலர் துரைசாமி வெளியிட்டு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் சரியாக காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டது. மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் தங்கள் தேர்வு முடிவை பார்த்தனர்.
வேலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதியிருந்த 20 ஆயிரத்து 841 மாணவர்களில் 16 ஆயிரத்து 720 பேரும், 23 ஆயிரத்து 749 மாணவிகளில் 21 ஆயிரத்து 177 பேரும் என மொத்தம் 37 ஆயிரத்து 897 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 84.99 சதவீத தேர்ச்சியாகும். இந்த ஆண்டும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
39 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
331 பள்ளிகளில் 39 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அதில் திருப்பாற்கடல் எஸ்.தேவராஜ் அரசு மேல்நிலை பள்ளியில் தேர்வு எழுதிய 37 மாணவ- மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோன்று திருவலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தேர்வு எழுதிய 73 மாணவிகளும், சோளிங்கள் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தேர்வு எழுதிய 41 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 3 அரசு பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் துரைசாமி தெரிவித்தார்.

Related Tags :
Next Story