தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தத்தளித்த 7 சங்குகுளி மீனவர்கள் மீட்பு


தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தத்தளித்த 7 சங்குகுளி மீனவர்கள் மீட்பு
x
தினத்தந்தி 13 May 2017 2:30 AM IST (Updated: 13 May 2017 12:23 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தத்தளித்த 7 சங்கு குளி மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தத்தளித்த 7 சங்கு குளி மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

சங்குகுளி மீனவர்கள்

தூத்துக்குடி திரேஸ்புரம் விவேகானந்த நகரை சேர்ந்த சுப்பையா மகன் முருகன் (35).

இவர், அதே பகுதியை சேர்ந்த மாரிசெல்வம் (25), சக்தி(20), தரக்குடியான் (28), லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த சந்தணகுமார்(39), குருசாமி(28), மணிகண்டன்(20) ஆகியோருடன் திரேஸ்புரத்தில் இருந்து நாட்டுப்படகில் சங்கு குளிப்பதற்காக சென்றார்.

மீட்பு


இவர்கள் தூத்துக்குடியில் இருந்து சுமார் 8 கடல்மைல் தொலைவில் சங்குகுளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது படகு என்ஜின் பழுதடைந்தது. இதனால் 7 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்தனர். உடனடியாக கடலோர பாதுகாப்பு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்த 7 சங்குகுளி மீனவர்கள் மற்றும் அவர்களின் படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

Next Story