மணல் கடத்தல்; 2 பேர் கைது


மணல் கடத்தல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 May 2017 3:15 AM IST (Updated: 13 May 2017 1:04 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த பூண்டி பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதியில் மணல் கடத்தி வந்த 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பூண்டி பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதியில் மணல் கடத்தல் நடப்பதாக புல்லரம்பாக்கம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் மற்றும் போலீசார் பூண்டி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். அந்த டிராக்டரை ஓட்டி வந்த பூண்டியை சேர்ந்த ஆனந்தன் (வயது 40), செல்வம் (42) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், சப்–இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் சித்துக்காடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஆற்றில் மணல் கடத்துவது தெரியவந்தது. இதை தொடர்ந்து அங்கு சென்று பார்த்தனர். அந்த பகுதியில் மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட ஒரு பொக்லைன் எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த 2 பேர் தப்பி ஓடி விட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். 

Next Story