பிளஸ்–2 தேர்வு முடிவு திருவள்ளூர் மாவட்டத்தில் 87.56 சதவீதம் மாணவ–மாணவிகள் தேர்ச்சி


பிளஸ்–2 தேர்வு முடிவு திருவள்ளூர் மாவட்டத்தில் 87.56 சதவீதம் மாணவ–மாணவிகள் தேர்ச்சி
x
தினத்தந்தி 13 May 2017 4:00 AM IST (Updated: 13 May 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 87.56 சதவீதம் மாணவ–மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் 88.54 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிவுகளை கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டார்.

 அப்போது அவர் கூறியதாவது:–

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 321 பள்ளிகளில் பிளஸ்–2 தேர்வை 24 ஆயிரத்து 505 மாணவிகள், 22 ஆயிரத்து 296 மாணவர்கள் என மொத்தம் 46 ஆயிரத்து 801 பேர் எழுதினார்கள். அதில் மாணவிகள் 22 ஆயிரத்து 397 பேர், மாணவர்கள் 18 ஆயிரத்து 584 பேர் என மொத்தம் 40 ஆயிரத்து 981 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மொத்த தேர்ச்சி விகிதம் 87.56 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 87.44 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.12 சதவீதம் தேர்ச்சி விகிதம் கூடுதல் ஆகும். அரசு பள்ளிகளில் 17 ஆயிரத்து 337 பேர் தேர்வு எழுதினார்கள். அதில் 12 ஆயிரத்து 878 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மொத்த தேர்ச்சி விகிதம் 74.28 சதவீதம் ஆகும்.

மெட்ரிக் பள்ளிகள்

மெட்ரிக் பள்ளியில் மொத்தம் 21 ஆயிரத்து 102 பேர் தேர்வு எழுதினார்கள். அதில் 20 ஆயிரத்து 456 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி விகிதம் 96.94 சதவீதம் ஆகும். நகராட்சி பள்ளிகளில் மொத்தம் 255 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அதில் 218 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி விகிதம் 85.49 சதவீதம் ஆகும். ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மொத்தம் 487 பேர் தேர்வு எழுதினார்கள். அதில் 377 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி விகிதம்  77.41 ஆகும். பார்வையற்றோர் பள்ளியில் 22 பேர் தேர்வு எழுதினார்கள். அதில் 19 பேர் தேர்ச்சி பெற்றனர்.

அதன் தேர்ச்சி விகிதம் 86.36 சதவீதம் ஆகும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்தம் 4 ஆயிரத்து 9 பேர் தேர்வு எழுதினார்கள். அதில் 3 ஆயிரத்து 268 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி விகிதம் 93.84 சதவீதம் ஆகும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story