பிளஸ் 2 தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 92.06 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
பிளஸ்-2 தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 92.06 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி, கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 92.06 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகம் ஆகும்.
92.06 சதவீத தேர்ச்சி
தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் இந்த பொதுத்தேர்வை 8 ஆயிரத்து 361 மாணவ-மாணவிகள் எழுதி இருந்தனர்.
இதில் 7 ஆயிரத்து 697 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.06 சதவீத தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டில் மாணவ-மாணவிகள் 91.29 சதவீதம் தேர்ச்சி பெற்று இருந்தனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
மாணவ-மாணவிகள்
மாணவர்களில் 3 ஆயிரத்து 746 பேர் தேர்வு எழுதியதில் 3 ஆயிரத்து 284 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 87.67 சதவீத தேர்ச்சி ஆகும். மாணவிகளில் 4 ஆயிரத்து 615 பேர் எழுதியதில் 4 ஆயிரத்து 413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.62 சதவீத தேர்ச்சி ஆகும். எனவே மாணவர் களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
11 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
மேலும் நீலகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 87.48 சதவீதமாக உள்ளது. மொத்தம் 3 ஆயிரத்து 292 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 2 ஆயிரத்து 880 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 11 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. இதில் 5 அரசு பள்ளிகளும் அடங்கும். அதன் விவரம் வருமாறு:-
அரசு பள்ளிகளில் எடக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, கண்னேரிமந்தனை அரசு மேல் நிலைப்பள்ளி, கக்குச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, தூனேரி அரசு மேல்நிலைப்பள்ளி, தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் ஆகும்.
அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பள்ளி, சத்தியசாய் மெட்ரிக் பள்ளி, கோத்தகிரி கிரீன்வேலி மெட்ரிக் பள்ளி, குன்னூர் ஜோசப் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, ஊட்டி சாந்திவிஜய் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, அய்யங்ககொல்லி தாமஸ் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி ஆகியவை 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன.
ஊட்டியில் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வதற்காக மாணவ-மாணவிகள் நேற்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு சென்று ஆர்வமுடன் பார்த்தனர். தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் பலர் கற்றுத்தந்த ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Related Tags :
Next Story