மாதர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்: மாங்குடியில் மதுக்கடை மூடப்பட்டது
திருத்துறைப்பூண்டியை அடுத்த மாங்குடியில் இயங்கி வந்த மதுக்கடையை மூட வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டியை அடுத்த மாங்குடியில் இயங்கி வந்த மதுக்கடையை மூட வலியுறுத்தி இந்திய தேசிய மாதர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றியத்தலைவர் மீனாம்பாள் தலைமை தாங்கினார். மாதர் சங்கத்தை சேர்ந்த கயல்விழி, மாலா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முத்துப்பேட்டை ஒன்றியச்செயலாளர் முருகையன், நிர்வாக குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் 300 பெண்கள் உள்பட திரளான பேர் கலந்து கொண்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த திருத்துறைப்பூண்டி துணை போ லீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், போ லீ ஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மதுக்கடையை மூடினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என அவர்கள் கூறினர். அதனைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் நிறுவன மேலாளர் ராஜகோபால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து மதுக்கடை மூடப்பட்டது.

Related Tags :
Next Story