5 போலீஸ் சூப்பிரண்டுகள் டி.ஐ.ஜி.களாக பதவி உயர்வு


5 போலீஸ் சூப்பிரண்டுகள் டி.ஐ.ஜி.களாக பதவி உயர்வு
x
தினத்தந்தி 13 May 2017 4:30 AM IST (Updated: 13 May 2017 2:35 AM IST)
t-max-icont-min-icon

தமிழக போலீஸ் துறையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகளை டி.ஐ.ஜி.களாக பதவி உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

சென்னை,

தமிழக போலீஸ் துறையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகளாக (செலக்‌ஷன் கிரேடு) இருக்கும் அமித் குமார் சிங், அஸ்வின் கோட்னிஸ், பாலகிருஷ்ணன், பிரதிப் குமார், சுதாகர் ஆகியோரை டி.ஐ.ஜி.களாக பதவி உயர்த்தி தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. இவர்கள் 5 பேருக்கும் விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும்.

மேலும் தமிழக போலீஸ் துறையில் தற்போது சூப்பிரண்டுகளாக பணியாற்றும் டாக்டர் செந்தில்வேலன், அவினாஷ் குமார், அஷ்ரா கார்க், ஏ.ஜி.பாபு, செந்தில் குமாரி, துரைகுமார், மகேஸ்வரி, ஆஷியம்மாள், ராதிகா, லலிதா லட்சுமி, ஜெயகவுரி, காமினி ஆகியோருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு (செலக்‌ஷன் கிரேடு) அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவையும் தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. இவர்கள் அடுத்த ஆண்டு டி.ஐ.ஜி.களாக பதவி உயர்வு பெறுவார்கள்.

Next Story