அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட விவகாரம்: இளநிலை பொறியாளர் பணி இடைநீக்கம்
தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு பிரச்சினை தொடர்பாக இளநிலை பொறியாளரை பணி இடைநீக்கம் செய்து மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
சென்னை வடபழனி தெற்கு பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஆர்.ஜே.இ.எஸ். என்ற அடுக்குமாடி குடியிருப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தின் போது புகை மூட்டத்தில் சிக்கி மூச்சு திணறி 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மீனாட்சி (வயது 65), அவரது மகள் செல்வி(40) மீனாட்சியின் பேரக்குழந்தைகள் சந்தியா(10), சஞ்சய்(3) ஆகியோர் பலியானார்கள். மேலும் தீ விபத்தில் சிக்கி 8 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
சட்ட விரோதமாக
இந்த நிலையில் தீ விபத்து நிகழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பு அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளது என்றும், அதை இடிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதும் தெரியவந்தது. ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் அதை இடிக்காமல் விட்டுவிட்டு குடியிருப்பில் வசித்து வந்தவர்களை காலி செய்யும் போது பிரச்சினை ஏற்படுகிறது என்று கூறினர்.
அந்த அடுக்குமாடி கட்டிடம் அ.தி.மு.க. பிரமுகரான விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் என்பதால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறி விட்டனர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
நடவடிக்கை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக, 130–வது வார்டு இளநிலை பொறியாளரான குமரவேல் என்பவரை பணி இடைநீக்கம் செய்து சென்னை மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து மண்டல அதிகாரி கூறியதாவது:–
வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான பிரச்சினையில் ஒருவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தீ விபத்து நடந்த அடுக்குமாடி கட்டிடத்தை இடிப்பது தொடர்பான வழக்கு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. ஆகவே விசாரணை முடிந்து தீர்ப்பு வந்த பிறகே இந்த கட்டிடத்தை இடிப்பது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story