பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியீடு: அரியலூர் மாவட்டத்தில் 88.48 சதவீதம் பேர் தேர்ச்சி
பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியீடு: அரியலூர் மாவட்டத்தில் 88.48 சதவீதம் பேர் தேர்ச்சி, 1,000 மதிப்பெண்களுக்கு மேல் 148 பேர் பெற்றனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டதில் 88.48 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 1,000 மதிப்பெண்களுக்கு மேல் 148 மாணவ, மாணவிகள் பெற்றனர்.
தேர்வு முடிவு வெளியீடு
தமிழகத்தில் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. மாணவர்களின் மன உளைச்சலை தடுக்கும் பொருட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவ-மாணவிகளின் விவரம் வெளியிடப்படவில்லை. அந்த வகையில் அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து நேற்று காலை முதலே பிளஸ்-2 தேர்வு முடிவு குறித்த விவரம், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சரியாக காலை 10 மணியளவில் அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் தேர்வு முடிவு வெளியானது.
அரியலூர் மாவட்ட பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் பிளஸ்-2 தேர்வு முடிவு தகவல்கள் ஒட்டப்பட்டன. அதில் மாணவர்களின் பெயர், மதிப்பெண்கள் விவரம், தேர்ச்சி விவரம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தன. தேர்வு முடிவுக்காக ஆர்வத்துடன் காத்திருந்த மாணவ, மாணவிகள் தங்களது பள்ளிக்கு வந்து தேர்வு முடிவை தெரிந்து கொண்டனர். பின்னர் மாணவர்கள் தங்களது நண்பர்களை சந்தித்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர். தேர்ச்சி பெறாத சில மாணவர்கள் மட்டும் சோகத்துடன் காணப்பட்டனர்.
சிரமமின்றி தேர்வு முடிவை அறிந்தனர்
இதேபோல் அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட மைய நூலகம் மற்றும் கிளை நூலகங்களிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தகவல் சேவை மையம் உள்ளிட்ட இடங்களிலும் பிளஸ்-2 தேர்வு முடிவை மாணவர்கள் கட்டணமின்றி பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு மாணவ, மாணவிகள் சென்று தேர்வு முடிவை பார்வையிட்டு மதிப்பெண் விவரத்தை நகல் எடுத்து கொண்டனர். மேலும் மாணவர்களது செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண் விவரம் நேரடியாக வந்ததால் சிரமமின்றி தேர்வு முடிவை தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றபடி அரியலூர் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் விவரம் கல்வித்துறை அலுவலகம் மூலம் அறிவிக்கப்படவில்லை. இதனால் 1,150-க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகள் தாம் மாவட்டத்தில் சிறப்பான இடத்தினை பெற்றிருக்கலாம் என எண்ணினர். எனினும் சில பள்ளி நிர்வாகம் தங்களது பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் விவரத்தை தெரிவித்தனர்.
88.48 சதவீதம் தேர்ச்சி
அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு விவரம் பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.ஒளி நிருபர்களிடம் கூறியதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி மற்றும் மெட்ரிக் என 72 பள்ளிகளை சேர்ந்த 3,685 மாணவர்கள் மற்றும் 4,682 மாணவிகள் என மொத்தம் 8,367 பேர் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வினை எழுதினர். இதில் 3,096 மாணவர்கள், 4,305 மாணவிகள் என 7,401 பேர் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதில் 1,000 மதிப்பெண்களுக்கு மேல் 148 மாணவ, மாணவிகள் பெற்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.
அரியலூர் மாவட்ட தேர்ச்சி சதவீதம் 88.48 ஆகும். கடந்த ஆண்டு 90.53 தேர்ச்சி சதவீதத்துடன் 22-வது இடத்தை அரியலூர் பிடித்திருந்தது. தற்போது தேர்ச்சி விகிதம் குறைந்ததால் 26-வது இடத்துக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களில் சிறப்புடன் செயல்பட்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முயற்சி எடுப்போம்.
பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியீட்டில் அரசு கொண்டு வந்த மாற்றம் வரவேற்கத்தக்கது ஆகும். நூலிழையில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களை தவறி விடும் மாணவ, மாணவிகளின் மன உளைச்சலை தடுக்க வாய்ப்பாக இருக்கும் என நம்புகிறேன். மேலும் அரசு பள்ளிகளின் எழுச்சிக்கும் இது வித்தாக அமையும். வணிக ரீதியாக செயல்படும் சில தனியார் பள்ளிகளுக்கு இது பெருத்த அடியாக இருக்கும். பிளஸ்-2 தேர்வு முடிவில் மாணவர்களின் சிறப்பான இடம் தான் தெரியப்படுத்தப்படவில்லை. ஆனால் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை வைத்து மேற்படிப்பு படித்து வாழ்க்கையில் முன்னேறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பரிப்பின்றி வெளியான தேர்வு முடிவு
ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ஒரு பள்ளி மாணவியும், அரியலூரை சேர்ந்த ஒரு மாணவரும் 1,176 மதிப்பெண்கள் பெற்று அரியலூர் மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்றதாக அதிகாரப்பூர்வமில்லாமல் தகவல் பரவியது. அந்த மாணவ, மாணவிக்கு அவர்களது பெற்றோர் கேக் ஊட்டியும், முத்தமிட்டும் வாழ்த்து கூறினர். மேலும் அவர்கள் படித்த பள்ளி ஆசிரியர்களும் வாழ்த்து கூறி பாராட்டினர். எந்த ஒரு ஆர்ப்பரிப்பும் இல்லாமல் அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது பொதுமக்கள் பலரிடையே வரவேற்பினை பெற்றது. எனினும் மிகுந்த சிரத்துடன் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண், பெயர் விவரம் தெரியப்படுத்தப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் பாராட்டு கிடைக்க பெறாததால் வருத்தமடைந்தனர். பெற்றோர் மட்டும் அந்த மாணவர்களை பாராட்டி வாழ்த்து கூறி ஊக்குவித்ததை பார்க்க முடிந்தது.

Related Tags :
Next Story