பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு: கரூர் மாவட்டத்தில் 94.95 சதவீதம் பேர் தேர்ச்சி
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு: 94.95 சதவீதம் பேர் தேர்ச்சி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தகவல்
கரூர்,
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் கரூர் மாவட்டத்தில் 94.95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் கூறினார்.
பிளஸ்-2 தேர்வு
தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இது குறித்து கரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் கூறியதாவது:-
கரூர் மாவட்டத்தில் 54 அரசு பள்ளிகள், 10 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12 சுய நிதி பள்ளிகள், 2 மெட்ரிக் பள்ளிகள், 2 ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 104 பள்ளிகளில் இருந்து 5,458 மாணவர்கள், 5,946 மாணவிகள் என மொத்தம் 11 ஆயிரத்து 404 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 5,112 மாணவர்கள், 5,717 மாணவிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 829 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி விகிதம் அதிகம்
தேர்வு எழுதியதில் 575 பேர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர். அதன்படி பிளஸ்-2 பொதுத்தேர்வில் கரூர் மாவட்டம் 94.95 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு 93.52 சதவீதம் தேர்ச்சி பெற்றது. அதன்படி இந்த ஆண்டு 1.43 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story