பிளஸ் 2 தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 92.16 சதவீதம் பேர் தேர்ச்சி


பிளஸ் 2 தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 92.16 சதவீதம் பேர் தேர்ச்சி
x
தினத்தந்தி 13 May 2017 4:00 AM IST (Updated: 13 May 2017 3:10 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 92.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைவிட 0.85 சதவீதம் குறைவு ஆகும்.

புதுக்கோட்டை

தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 389 மாணவர்களும், 11 ஆயிரத்து 68 மாணவிகளும் என மொத்தம் 20 ஆயிரத்து 457 பேர் தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 8 ஆயிரத்து 369 மாணவர்களும், 10 ஆயிரத்து 484 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 853 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 92.16 சதவீத தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.85 சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைவு ஆகும்.

இதில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 232 மாணவர்களும், 6 ஆயிரத்து 232 மாணவிகளும் என 11 ஆயிரத்து 464 பேர் தேர்வு எழுதினர். இதில் 4 ஆயிரத்து 539 மாணவர்களும், 5 ஆயிரத்து 848 மாணவிகளும் என 10 ஆயிரத்து 387 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 90.61 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டை விட 3.10 சதவீதம் குறைவு ஆகும்.

அறந்தாங்கி கல்வி மாவட்டம்

அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 157 மாணவர்கள், 4 ஆயிரத்து 836 மாணவிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 993 பேர் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 830 மாணவர்கள், 4 ஆயிரத்து 636 மாணவிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 466 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 94.14 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டைவிட 2.01 சதவீதம் அதிகம் ஆகும்.

தேர்வு முடிவுகள் வெளியானதும் அந்தந்த பள்ளிகளில் அதன் விவரம் தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்தது. இதனை மாணவ-மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் ஆர்வமாக பார்த்து சென்றனர்.

Next Story