சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதி கவிழ்ந்ததில் 2 பேர் பலி
திருமயம் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதி கவிழ்ந்ததில் கண்டக்டர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 13 பயணிகள் காயமடைந்தனர்.
திருமயம்,
மதுரையில் இருந்து நேற்று 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று புதுக்கோட்டை வழியாக தஞ்சாவூரை நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சை திருச்சி லால்குடியை சேர்ந்த முத்துக்குமாரசாமி (வயது 38) ஓட்டி வந்தார். கண்டக்டராக தஞ்சாவூரை சேர்ந்த சுப்பிரமணி (40) என்பவர் பணியில் இருந்தார்.
இந்த நிலையில் பஸ் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மலைக் குடிப்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக அரசு பஸ் லாரியின் பின் பகுதியில் மோதி கவிழ்ந்தது. இதில் கண்டக்டர் சுப்பிரமணி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் பஸ்சில் பயணம் செய்த 14 பயணிகள் காயமடைந்தனர்.
இந்த விபத்தை பார்த்த அந்த பகுதியினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கறம்பக்குடி அருகே உள்ள வெள்ளாளவிடுதி பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் (60) என்ற முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மேலும் படுகாயமடைந்த மணிராஜ் (10), நீலிக்கனி (37), மல்லிகா (40), முகைதீன் (34), ரசீதா (34) ஆகியோர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிறிய காயமடைந்த பயணிகள் திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு மாற்று பஸ் மூலம் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
அரசு மருத்துவமனை முற்றுகை
மேலும் விபத்தில் இறந்த கண்டக்டர் சுப்பிரமணி, ராஜமாணிக்கம் ஆகியோரது உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருமயம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருமயம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் திருமயம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் விபத்துகளில் சிக்கி காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பணியில் இருப்பது கிடையாது. மேலும் மேல்சிகிச்சை என்ற பெயரில் திருமயம் அரசு மருத்துவமனைக்கு வருபவர்களை புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். இரவு நேரங்களில் பணியில் மருத்துவர்கள் இருந்தால் விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருபவர்களின் உயிர்களை காப்பாற்றலாம். எனவே இரவு நேரங்களில் திருமயம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்கள். இந்த சம்பவத்தால் நேற்று திருமயம் அரசு மருத்துவமனை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story