மேற்கு வங்க தொழிலதிபர் கொலை: கொலையாளியை பிடிக்க தனிப்படையினர் தீவிரம்
புதுச்சேரியில் மேற்கு வங்க தொழிலதிபர் கொலையில் தொடர்புடைய கொலையாளியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை.
புதுச்சேரி,
புதுச்சேரியில் மேற்கு வங்க தொழிலதிபர் கொலை செய்யப்பட்டு தொழிற்சாலை கட்டுமானப்பணிகள் நடந்த அவரது இடத்திலேயே உடல் புதைக்கப்பட்டது. இதில் தொடர்புடைய கொலையாளியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
மேற்கு வங்க தொழிலதிபர்
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் விவேக்பிரசாத் (வயது 40). தொழிலதிபர். இவர் தொழில் தொடங்குவதற்காக குடும்பத்துடன் புதுவை வந்து தங்கினார். ரெட்டியார்பாளையம் ராகவேந்திராநகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த அவர் தமிழக பகுதியான வானூர் பூத்துறையில் இடம் வாங்கி அங்கு குடிநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கினார். அவருக்கு இடம் வாங்கி கொடுத்தது முதல் தொழிற்சாலை தொடங்குவது உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் சுல்தான்பேட்டையை சேர்ந்த பாபு (38) என்பவர் செய்து கொடுத்தார்.
கொன்று உடல் புதைப்பு
கடந்த மே 1-ந்தேதி வீட்டை விட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்ட விவேக்பிரசாத் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்த அவரது மனைவி ஜெயந்தி ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் வம்பாக்கீரபாளையம் பகுதியில் சாவியுடன் ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்த மோட்டார் சைக்கிள் குறித்து விசாரித்ததில் அது விவேக் பிரசாத்துக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதை வைத்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பாபு தலைமறைவானது கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேகத்தின்பேரில் விவேக் பிரசாத் தொழிற்சாலை கட்டுமானப்பணி நடந்த இடத்துக்குச் சென்று பார்த்ததில் அங்கு புதிதாக கட்டப்பட்டு இருந்த கழிவறை தொட்டியில் அவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தீவிர தேடுதல் வேட்டை
போலீசாரை அதிர வைத்த இந்த சம்பவம் குறித்து கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வந்த கணபதி என்பவரிடம் விசாரித்ததில் பாபு தான் விவேக் பிரசாத்தை கொலை செய்தது அம்பலமானது. இந்தநிலையில் தலைமறைவாக இருந்து வரும் அவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
தொழிலதிபர் விவேக் பிரசாத் கொலை செய்யப்பட்டதற்கு வேறு முக்கிய காரணம் எதுவும் உண்டா? என்பது குறித்து அவரது உறவினர்களிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழக பகுதியான கடலூர், விழுப்புரம் பகுதியில் பாபு தலைமறைவாக உள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. விவேக் பிரசாத்துக்கு உதவியாக இருந்து வந்தநிலையில் போலீசில் பாபு பிடிபட்டால் இந்த கொலை சம்பவத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகும் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறப்பட்டது.

Related Tags :
Next Story