தனி மனித ஒழுக்கத்தை ராமாயணம் போதிக்கிறது கம்பன் விழாவில் நாராயணசாமி பேச்சு


தனி மனித ஒழுக்கத்தை ராமாயணம் போதிக்கிறது கம்பன் விழாவில் நாராயணசாமி பேச்சு
x
தினத்தந்தி 13 May 2017 3:56 AM IST (Updated: 13 May 2017 3:56 AM IST)
t-max-icont-min-icon

தனி மனித ஒழுக்கத்தை ராமாயணம் போதிக்கிறது என்று புதுவை கம்பன் விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

புதுச்சேரி,

புதுவை கம்பன் விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

கம்பன் விழாவுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நான் இளம் வக்கீலாக இருந்தபோது வக்கீல் முருகேசனுடன் இணைந்து கம்பன் விழாவில் முக்கிய விருந்தினர்களை ஒருங்கிணைக்கும் வாய்ப்பினை பெற்றேன். அதன்பின் எம்.பி. ஆனதால் சில காலம் அந்த பணிகளை செய்ய முடியவில்லை.

தனி மனித ஒழுக்கத்தை ராமாயணம் போதிக்கிறது. ராமபிரான் தனிமனித ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவது எப்படி? என்பதை கடைபிடித்து காட்டினார். அவர் வனவாசம் சென்ற பின் அவர் அணிந்திருந்த காலணியை வைத்து பரதன் ஆட்சியை நடத்தினார்.

அரசே ஒருங்கிணைத்து நடத்துகிறது

கம்பன் விழா இலங்கை, பிரான்சு, இங்கிலாந்து உள்பட பல்வேறு வெளிநாடுகளிலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கொண்டாடப்படுகிறது. ஆனால் புதுவையில்தான் மாநில அரசே ஒருங்கிணைத்து கம்பன் விழாவை நடத்துகிறது. மற்ற பகுதிகளை மிஞ்சும் அளவுக்கு இங்கு கம்பன் விழா கொண்டாடப்படுகிறது.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார். 

Next Story