சோலையாக மாறிய பாலைவனம்
எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து 2 மணி நேர பயணத்தில் இருக்கிறது, செரபியம் பாலைவனக் காடு.
340 ஹெக்டேரில் பரந்து விரிந்துள்ள இந்தக் காடு, சுற்றுச்சூழலின் அதிசயம்! ஏனெனில் பாலைவனத்தின் நடுவே அழகிய சோலைவனத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
ஆண்டுக்கணக்கில் மழை இல்லாத இடங்கள் காலப்போக்கில் பாலை நிலங் களாக மாறிவிடுகின்றன. ஆப்பிரிக்காவில் இப்படிப்பட்ட நிலங்கள் அதிகம். அப்படித்தான் செரபியம் பகுதியும் பாலைவனமாக மாறிக்கொண்டிருந்தது. அதை தடுக்கும் முயற்சியாக ஜெர்மனி மற்றும் எகிப்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கழிவுநீரின் மூலம், பாலைவனத்தின் நடுவே சோலை வனத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
நகரங்களில் இருக்கும் கழிவுநீரை, குறிப்பிட்ட அளவுக்கு சுத்திகரித்து, நீண்ட குழாய்கள் மூலம் பாலைவனத்துக்கு அனுப்புகிறார்கள். விதைகள், மரங்கள், செடிகள் என்று நடப்பட்ட இடங்களில் குழாய் மூலம் கழிவுநீர் பாய்ச்சப்படு கிறது. அதனால் மழையை எதிர்பார்த்து இந்தத் தாவரங்கள் வாழ வேண்டிய அவசியம் இல்லை.
‘கழிவு நீரை ஓரளவு சுத்தம் செய்து பயன்படுத்துவதால், செடிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இங்குள்ள மரங்களில் இருந்து பெறப்படும் காய், கனிகள் நூறு சதவீதம் பாதுகாப்பானவை. கழிவு நீரில் இருக்கும் சத்துகளும், சூரிய ஒளியும் செரபியம் காடுகளை வேகமாக வளர வைக்கின்றன. 15 ஆண்டுகளில் மரம் வெட்டக்கூடிய அளவுக்கு வளர்ந்து விடுகிறது’ என்கிறார்கள் ஆராய்ச்சி யாளர்கள்.

Related Tags :
Next Story